உங்க கட்சிக்கும் இந்த நிலை வரலாம்… கவிழும் நிலை ஏற்படும் : மராட்டிய அரசியல் குறித்து பாஜக மீது மம்தா பானர்ஜி பாய்ச்சல்!!
Author: Udayachandran RadhaKrishnan23 June 2022, 8:29 pm
மஹாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏ.,க்களுடன் பா.ஜ., ஆளும் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் தஞ்சம் அடைந்துள்ளார் சிவசேனா மூத்த தலைவரும், மாநில பொதுப்பணித்துறை அமைச்சருமான ஏக்னாத் ஷிண்டே. அவர்கள் அரசுக்கு எதிராக முடிவெடுக்கும் பட்சத்தில் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்ததாவது: உத்தவ் தாக்கரே மற்றும் அனைவருக்கும் நீதி வேண்டும். இன்று நீங்கள் (பா.ஜ.க) அதிகாரத்தில் இருக்கிறீர்கள். அதனால் பணபலம், மாபியா பலத்தைப் பயன்படுத்துகிறீர்கள். ஆனால் ஒரு நாள் நீங்கள் ஆட்சியில் இருந்து சென்றாக வேண்டும்.
உங்கள் கட்சியையும் யாராவது உடைக்கலாம். இது தவறு, இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. மஹாராஷ்டிராவிற்கு பிறகு மற்ற மாநில அரசுகளையும் கவிழ்ப்பார்கள். மக்களுக்கு நீதி வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.