மருத்துவ மாணவி கொலை வழக்கு.. பலாத்கார குற்றவாளிக்கு ஏழு நாட்களில் தூக்கு தண்டனை?..

Author: Vignesh
28 August 2024, 6:51 pm

கொல்கத்தா பயிற்சி மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளியை தூக்கில் போட வலியுறுத்தி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடும்படி மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா கூறியுள்ளார். போராட்டம் நடத்திவரும் பாஜகவுக்கு போட்டியாக மம்தா இவ்வாறு அறிவித்துள்ளார்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் இளைஞர் அணி கூட்டத்தில் மம்தா பேசியதாவது, சட்டசபை கூட்டத்தைக் கூட்டி பலாத்கார குற்றவாளிக்கு 7 நாட்களில் தூக்கு தண்டனை நிறைவேற்றும் வகையில், சட்ட திருத்தம் கொண்டு வருவோம் என்றும் போராட்டம் நடத்தும் பாஜகவிற்கு நீதி கிடைப்பதில் ஆர்வம் இல்லை மாநிலத்தை அவமானப்படுத்த முயற்சி செய்கிறது.

வரும் 31-ல் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வலியுறுத்தி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். மேலும், மறுநாள் பெண்கள் போராட்டம் நடத்த வேண்டும். உத்தரப்பிரதேசத்தில், மத்திய பிரதேசத்தில் மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவத்திற்காக அம்மாநில முதல்வர்கள் பதவி விலகினாரா என்று கேள்வி எழுப்பி அந்த கூட்டத்தில் மம்தா பேசி இருந்தார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!