புதுச்சேரி ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக போலி பணி ஆணை தயார் செய்து ரூ.59 லட்சம் மோசடி செய்த நபரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் சுதாகர் நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (69). கம்பன் நகரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் தனது நண்பரும் பாஜக பிரமுகருமான செல்வத்திடம் தனது மகன் பட்டபடிப்பு முடித்துவிட்டு தன்னுடன் கடையில் வேலை செய்து வருவதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து, அவருக்கு ஏதேனும் அரசு துறையில் வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என கூறியதை அடுத்து செல்வம், தனக்கு ஜிப்மர் இயக்குனரிடம் உதவியாளராக பணிபுரியும் மணிகண்டன் என்பரை தெரியும் என்று கூறி கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் மணிகண்டன் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இதனையடுத்து ஜனவரி மாதம் பிரபாகரனிடம் மணிகண்டன் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 17 லட்சத்தை தனது வங்கி கணக்கின் மூலம் பெற்றுள்ளார். இதுமட்டுமன்றி பிரபாகரன் தனக்கு தெரிந்த சிலரையும் அறிமுகப்படுத்தி அவர்களிடமும் ஜிப்மரில் செவிலியர், வரவேற்பாளர், அட்டண்டர் உள்ளிட்ட பணிகளை மணிகண்டன் வாங்கி தருவார் என கூறி ரூபாய் 59 லட்சம் வரை பெற்று தந்துள்ளார்.
மணிகண்டனும் சிலருக்கு பணி ஆனையை அனுப்பியுள்ளார். பின்னர் போன் செய்து இன்னும் வேலை தயாராகவில்லை அதனால் இப்போது செல்ல வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
இதில் சுரேஷ் என்பவர் மட்டும் ஜிப்மருக்கு சென்று தனது பணி ஆணையை காண்பித்துள்ளார், அப்போதுதான் அது போலியாக தயார் செய்யப்பட்டது என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பிரபாகரன் ரெட்டியார்பாளயம் காவல் நிலையத்தில் புகார் பேரில் போலிசார் மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மோகன் ஜி உருக்கமான பதிவு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் மலையின்பாதியை காணும்,இதையெல்லாம் கேட்க யார் வருவார் என தமிழ்…
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில்தான் படிக்கிறார், அதனால் அவருக்குத்தானே அறிவில்லை என்று அர்த்தம்…
டி. இமான் தனிப்பட்ட வாழ்க்கை தமிழ் சினிமாவில் தனித்துவமான இசையமைப்பாளராக திகழும் டி.இமான் விஸ்வாசம், மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர்…
சிவகாசியில், மனைவியின் தகாத உறவைத் தட்டிக் கேட்ட கணவர் கள்ளக்காதலன் உள்ளிட்ட 4 பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
குடும்பஸ்தன் திரைப்படம் – ஓடிடி & வசூல் சாதனை! மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான குடும்பஸ்தன் திரைப்படம் திரையரங்குகளில் பெரிய…
திருப்பூர் மாவட்ட திமுகவை நான்காக பிரித்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்ப்பட்டுள்ள நிலையில், இதனால் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என…
This website uses cookies.