பொம்மைக்காக குழந்தைகள் போட்டுக்கொண்ட செல்லச் சண்டை: ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற சைக்கோ தந்தை….!!

Author: Sudha
19 August 2024, 6:10 pm

சத்தீஸ்கர் மாநிலம், ஜான்ஜிர் சம்பா பகுதியில் வசித்து வருபவர் சல்மான் அலி(53). இவருக்கு அலிஷா பர்வீன்(8), அலினா பர்வீன்(9) என 2 மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். 2 மகள்களையும் தமது பராமரிப்பிலேயே சல்மான் அலி வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், சம்பவத்தன்று 2 பெண் குழந்தைகளுக்கும் பொம்மைக்காக சண்டை எழுந்துள்ளது. இதை பார்த்துக் கொண்டிருந்த சல்மான் அலி, ஒரு கட்டத்தில் கோபமடைந்து
இரு மகள்களையும் பெல்ட்டால் தாறுமாறாக அடித்து நொறுக்கி உள்ளார். தந்தையின் ஆக்ரோஷத்தை தாங்க முடியாமல் இருவரும் அலறி துடிக்க, சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அங்கு திரண்டனர்.

சல்மான் அலியின் ஆவேச தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் 8 வயது மகள் அலிஷா பர்வீன் மயங்கி சரிந்தார்.2 சிறுமிகளையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அலிஷா பர்வீன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.மற்றொரு சிறுமியான அலினா பர்வீன் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சல்மான் அலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ