ராமேஸ்வரம் கஃபேவில் உணவை வாங்கி சாப்பிடாமல் பையை மட்டும் விட்டுச் சென்ற நபர் : என்ஐஏ ஷாக் ரிப்போர்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2024, 10:01 pm

ராமேஸ்வரம் கஃபேவில் உணவை வாங்கி சாப்பிடாமல் பையை மட்டும் விட்டுச் சென்ற நபர் : என்ஐஏ ஷாக் ரிப்போர்ட்!

பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபேவில் மர்மபொருள் வெடித்து விபத்தானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது,. அதை விட இது வெடிகுண்டு விபத்துதான் என முதலமைச்சர் சித்தராமையா கூறியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர் இது குறித்து விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர், இதை அரசியலாக பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார் .

இந்த நிலையில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியது, ஓட்டலுக்கு வந்த மர்மநபர் ஒருவர் வைத்து சென்ற பையில் வெடிகுண்டு வெடித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெடி விபத்தில் காயமடைந்த 8 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக உபா மற்றும் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பெங்களூருவின் எச்ஏஎல் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல ஓட்டலில் பையை வைத்து சென்றவர் 30 முதல் 35 வயது இருக்கக்கூடிய நபர் என்றும், ரவை இட்லி வாங்கிக் கொண்டு அதை சாப்பிடாமல் பையை மட்டும் விட்டுச் சென்றதாக கூறியுள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 302

    0

    0