சென்னை ; மேற்குவங்கத்தில் வகுப்பறைக்குள் புகுந்து துப்பாக்கி காண்பித்து மாணவர்களை மிரட்டிய நபரை போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மால்டா பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிக்குள் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்துள்ளார். அப்போது, வகுப்பறையில் இருந்த மாணவர்களை மிரட்டியுள்ளார். மேலும் அந்த நபர் ஆசிட் நிறைந்த பாட்டில்களையும் தனது கையில் வைத்திருந்ததால் மாணவர்கள் மிகவும் அச்சமடைந்தனர்.
பள்ளியில் ஏற்பட்ட பதற்ற நிலையை அறிந்து அங்கு ஏராளமான உள்ளூர் மக்கள் திரண்டனர். அப்போது, அவரிடம் சாதுரியமாக பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்த ஆயுதங்கள், ஆசிட் பாட்டில்களை பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் ராஜு பல்லவ் என்பது தெரியவந்துள்ளது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், துணிச்சலாக செயல்பட்ட இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.