மாடியில் இருந்து தவறி விழுந்த தம்பி… தாங்கி பிடித்த அண்ணன்… வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
2 August 2022, 2:18 pm

வீட்டை சுத்தம் செய்யும் போது மேல் மாடியில் இருந்து தவறி விழுந்த தம்பியை அண்ணன் தாங்கி வீடியோ வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் மலப்புரம் அருகே சங்கரம்குளம் பகுதியில் அண்ணன், தம்பி இருவரும் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, மேல் மாடியில் சுத்தம் செய்து கொண்டிருந்த தம்பி சாதிக், கால் தவறி கீழே விழுந்தார்.

இதனை கீழ் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அவரது அண்ணன் ஷாஃபீக், உடனே சாதிக்கை தாங்கிப் பிடித்தார். இதனால், அவர் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார்.

அதேவேளையில், தம்பியை தாங்கிப் பிடித்ததில் ஷாபிக்கிற்கு கையில் பயங்கர வலி ஏற்பட்டது. அவர் வலி தாங்க முடியாமல், அங்கேயே படுத்து விட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…