இளம்நடிகையிடம் அந்தரங்க உறுப்பை காட்டிய இளைஞர்.. அரசுப் பேருந்தில் பயணித்த போது சில்மிஷம் ; வீடியோ வெளியிட்ட நடிகை..!!

Author: Babu Lakshmanan
19 May 2023, 8:40 am

பட்டப்பகலில் அரசுப் பேருந்தில் பயணித்த இளம்நடிகையிடம் இளைஞர் ஒருவர் அந்தரங்க உறுப்பை காண்பித்து சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து எர்ணாகுளத்திற்கு படப்பிடிப்புக்காக இளம் நடிகை ஒருவர் அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அங்கமாலி என்ற இடத்தில் இளைஞர் ஒருவரும் அந்தப் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தில் பயணிகளின் கூட்டம் இருந்த போதும், அந்த இளைஞர், இளம் நடிகையிடம் தொட்டு தொட்டு பேசியதோடு, அந்தரங்க உறுப்பையும் காட்டியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த இளம் நடிகை சுதாரித்துக் கொண்டு, அந்த நபரை தனது செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தார். வீடியோ எடுத்தபடி அந்த இளைஞரிடம் கேள்வி கேட்டதும், பேருந்தில் இருந்து இறங்க அவர் முயன்றார்.

பேருந்து நின்றதும் எகிறி குதித்து தப்பியோடிய இளைஞரை, நடத்துனரும், சக பயணிகளும் துரத்திச் சென்று பிடித்து, நெடும்பஞ்சேரி போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், இந்த இளைஞர் கோழிக்கோட்டை சேர்ந்த சவாத் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தனக்கு நேர்ந்த துயரத்தின் போது உதவிய பேருந்து ஊழியர்கள் மற்றும் சக பயணிகளுக்கு நன்றி தெரிவித்து நடிகை வீடியோ வெளியிட்டுள்ளார்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 1377

    2

    4