மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல்: இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் ஆர்வமுடன் வாக்களிக்கும் வாக்காளர்கள்..!!

Author: Rajesh
5 March 2022, 8:31 am

இம்பால்: மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலின் 2வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

Image

60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 28ம் தேதி நடைபெற்றது.

Image

முதற்கட்டமாக இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில், மீதி உள்ள 22 தொகுதிகளுக்கான இரண்டாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. இதில் 92 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Image

சுமார் 8.38 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக 1,247 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 1506

    0

    0