வீல் சேரில் வந்த மன்மோகன் சிங்… மனமுறுகி பாராட்டி பேசிய பிரதமர் மோடி : நாடாளுமன்றத்தில் சுவராஸ்யம்!!
கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரானது நாளை வரையில் நடைபெற உள்ளது. இன்று 7வது நாளாக மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் வழக்கமான விவாத நிகழ்வுகளுக்கு கூட்டத்தொடர் காலை 11 மணியளவில் தொடங்கியது.
இன்றைய கூட்டத்தொடரில், பதவி காலம் நிறைவடையும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தாக்கல் செய்தார். மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடிஉரையாற்றினார்
அப்போது அவர் பேசுகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமரும், மாநிலங்களவை உறுப்பினருமான மன்மோகன் சிங் பற்றி பேசினார். அவர் கூறுகையில், மன்மோகன் சிங் அனைவருக்கும் வழிகாட்டியாகவும், உத்வேகம் அளிக்க கூடியராகவும் இருந்துள்ளார். நமது நாட்டின் ஜனநாயகம் பற்றி பேசும் போதெல்லாம், மன்மோகன் சிங்கின் பங்களிப்பு எப்போதும் நினைவில் கொள்ளப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் கருப்பு உடை அணிந்து எதோ பேஷன் ஷோவில் பங்கேற்றது போல வந்துள்ளனர். கருப்பு உடை என்பது செழிப்படையும் இந்தியாவிற்கு திருஷ்டி போட்டு போல அமைந்துள்ளளது என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை கிண்டல் செய்தார் பிரதமர் மோடி.
இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் முன்னரே திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்திற்கு உரிய அளவிலான பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை என்று போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடதக்கது.
கலவையான விமர்சனம் சீயான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமின்பூரில் உள்ள உள்ளூர் ராகவேந்திரா நகர் காலனியில் வசிக்கும் சென்னைய்யா ( 55 )…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் புனித சேவியர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில்…
புகார் மீது புகார்.. சமீப காலமாகவே வடிவேலுவுடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் அவரை குறித்து பல புகார்களை அடுக்கி…
சுமாரான வரவேற்பு ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான…
This website uses cookies.