வருமான வரியில் மாற்றம்; ரத்து செய்யப்பட்ட ‘ஏஞ்சல் வரி’ வரிச்சலுகையில் 75,000 கழிவு; மகிழ்ச்சியில் ஸ்டார்ட் அப்

Author: Sudha
23 July 2024, 2:26 pm

புதிய வரி வரம்புகள் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது.தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு 75,000-ஆக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

0 – 3 லட்சம் – 0%

3-7 லட்சம் 5%

7 – 10 லட்சம் 10%

10 – 12 லட்சம் 15%

12 – 15 லட்சம் 20%

15 லட்சத்துக்கு மேல் – 30%

இந்தப் புதிய வரம்புகள் மூலம் தனிநபர் வருமான வரியில் 17,500 ரூபாய் வரை மிச்சமாகும் என சொல்லப்பட்டுள்ளது.மேலும் பழைய வருமான வரி செலுத்தும் முறையில் எந்தவித மாற்றமும் இல்லை. பழைய வருமான வரி முறையில் 2.5 லட்சம் ரூபாய் வரை வரி கிடையாது அது அப்படியே தொடரும் எனவும் புதிய வருமான வரி முறையில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது புதிய வருமான வரி முறையில் 3 லட்சம் ரூபாய் வரை வரி கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மூன்றில் இரண்டு பங்கு பேர் பழைய வரி செலுத்தும் முறையில் இருந்து புதிய வரி செலுத்தும் முறைக்கு மாறியிருக்கிறார்கள்.

`வருமான வரி தாக்கல் செய்வது தாமதம் ஆனால், அது குற்றமல்ல’இனி அது ஒரு குற்றமாக கருதப்படாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கான `ஏஞ்சல் வரி’ ரத்து செய்யப்படும்

குறிப்பிட்ட முதலீடுகளுக்கு 20% குறுகிய கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 25% ஆகக் குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

  • Trisha-love-viral-photo-japan. திரிஷாவின் காதல் பதிவு: ஜப்பானில் வைரலாகும் தகவல்!
  • Views: - 274

    0

    0