ராமநவமியை முன்னிட்டு திருப்பதி கோவிலில் திருமஞ்சனம் : ராமர் அலங்காரத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2022, 10:39 pm

ஸ்ரீராமநவமியை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சுவாமி ராமர் அலங்காரத்தில் வீதி உலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீராம நவமியை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் இன்று சீதா தேவி சமேத ஸ்ரீ ராமர், லக்ஷ்மணர், ஆஞ்சநேயர் ஆகிய உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று மாலை திருப்பதி மலையில் உள்ள கோவில் மாடவீதிகளில் உற்சவர் மலையப்ப சுவாமி ராமர் அலங்காரத்தில் ஹனுமந்த வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்களுடன் சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து தற்போது ஆலயத்தில் உள்ள தங்க வாசலருகே ஸ்ரீ ராம நவமி ஆஸ்தானம் நடைபெற்று வருகிறது.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 1383

    0

    0