திருமணமான பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கும்பல்.. வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்!

Author: Udayachandran RadhaKrishnan
22 January 2023, 7:37 pm

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசரிபஹ் மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண் (வயது 23) கடந்த 7-ம் தேதி இரவு தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அந்த வீட்டிற்கு வந்த பெண்ணின் உறவினர்கள் உள்பட 4 பேர் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் பாலியல் வன்கொடுமை முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். இதில், பெண்ணின் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்துள்ளது.

தீ வைத்து கொளுத்தியதில் பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 70 சதவிகித தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த 4 பேரில் 3 பேர் பெண்ணின் உறவினர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும், உயிரிழந்த பெண்ணின் கணவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், உயிரிழந்த பெண் அந்த நபரின் 4-வது மனைவி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, தன்னை அக்கம்பக்கத்தினர் மீட்டதாக உயிரிழந்த பெண் போலீசில் கூறியுள்ளார். ஆனால், மனைவியை தான் தான் மீட்டதாக உயிரிழந்த பெண்ணின் கணவர் கூறியுள்ளார்.

இதில் முரண்பாடுகள் இருப்பதால் உயிரிழந்த பெண்ணின் கணவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, கூட்டு பாலியல் வன்கொடுமை முயற்சி தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

  • Rashmika Mandanna Viral Video சினிமாவுக்காக 19 வயதில் ராஷ்மிகா பண்ண காரியத்தை பாருங்க..வைரலாகும் வீடியோ..!
  • Views: - 369

    0

    0