கேரளாவில் மாஸ்.. முதன்முறையாக கால் பதித்த பாஜக : நடிகர் சுரேஷ் கோபி வெற்றி..!!!
Author: Udayachandran RadhaKrishnan4 June 2024, 1:49 pm
நாடாளுமன்ற தேர்தலில், கேரள மக்களவை தொகுதியான த்ரிசூரில் பாஜக சார்பாக போட்டியிட்ட மலையாள நடிகரான சுரேஷ் கோபி தற்போது வெற்றி பெற்றுள்ளார். இவர் 3,93,273 வாக்குகள் பெற்று, அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிட்ட வி.எஸ்.சுனில் குமாரை விட 74,517 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக த்ரிசூரில் தொகுதியில் போட்டியிட்ட வி.எஸ்.சுனில் குமார் 3,18,756 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தை தக்க வைத்துள்ளார். இவரது வெற்றியை தொடர்ந்து அந்த தொகுதியில் உள்ள பாஜக தொண்டர்கள் உற்சாகமாக வெற்றியை வெடிவெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.