ஒருவேளை மீண்டும் மோடி வந்தால்… இனி நீங்கள் வாக்களிக்க போகும் கடைசி தேர்தல் இது : பகீர் கிளப்பும் காங்கிரஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2024, 6:25 pm

ஒருவேளை மீண்டும் மோடி வந்தால்… இனி நீங்கள் வாக்களிக்க போகும் கடைசி தேர்தல் இது : பகீர் கிளப்பும் காங்கிரஸ்!

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனர் கார்கே பேசியதாவது, பாஜக ஒவ்வொருவருக்கும் அமலாக்கத்துறை மூலம் நோட்டீஸ் அனுப்புகிறது. மத்திய விசாரணை அமைப்புகளை மூலம் மக்களை மிரட்டுகிறது. பயத்தால் சிலர் நட்பை விட்டு விலகுகிறார்கள், சிலர் கட்சியை விட்டு விலகுகிறார்கள், சிலர் கூட்டணியில் இருந்து விலகுகிறார்கள்.

இந்தியா கூட்டணியில் உள்ளோரை பயமுறுத்தி பிரிந்துவிட்டனர். பயந்தவர்களால் ஜனநாயகத்தை கட்டமைக்க முடியாது. ஒருவர் விலகுவது இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்தாது.

இதுவே உங்களுக்கு வாக்களிக்கும் கடைசி வாய்ப்பு. அதன்பிறகு தேர்தலே இருக்காது. அதாவது மோடி மீண்டு பிரதமரானால் நாட்டில் தேர்தல் முறையே இருக்காது.

இதனால், 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாட்டு மக்கள் வாக்களிப்பதற்கான கடைசி வாய்ப்பாக இருக்கும்.

நாட்டின் ஜனநாயகத்துக்கு முடிவு கட்டுவதுடன் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தி விடுவார் மோடி. நரேந்திர மோடியுடனான நட்பால் நவீன் பட்நாயக் என்ன லாபம் அடைந்தார்? கேள்வி எழுப்பி விமர்சித்தார்.

மேலும், ராகுல் காந்தி நாட்டை ஒருங்கிணைக்க விரும்புகிறார். ஆனால், பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் வெறுப்புகளை உருவாக்குகின்றனர். இதன் காரணமாக நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் விஷம் போன்றது, அவை நமது உரிமைகளைப் பறிக்கின்றன என்றும் கார்கே கூறினார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி
  • Close menu