மருத்துவ உபகரணங்கள் பழுது… 2 நாட்களில் பறிபோன 3 பச்சிளம் குழந்தைகளின் உயிர்கள்… கண்டுகொள்ளுமா அரசு..?

Author: Babu Lakshmanan
9 April 2022, 6:00 pm

திருப்பதி:கடப்பா அரசு மருத்துவமனையில் வைத்திய உபகரணங்கள் பற்றாக்குறை மற்றும் பழுது காரணமாக கடந்த இரண்டு நாட்களில் 3 பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பாவில் ராஜீவ் காந்தி இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் என்ற பெயரில் மல்டி ஸ்பெஷாலிட்டி வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை உள்ளது. அங்கு உள்ள பிரசவ வார்டு அருகே பிறந்த குழந்தைகளை பாதுகாத்து பராமரிக்கும் சிறப்பு பிரிவு உள்ளது.

இதற்காக அங்கு பல்வேறு மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சரியாக வேலை செய்யாத காரணத்தால், ஒரே மானிட்டர் மூலம் 30 குழந்தைகளுக்கு இணைப்பு கொடுத்து அவர்களின் உடல்நிலையை கண்காணிக்க வேண்டிய நிலை நிலவுகிறது.

இது போன்ற காரணங்களால் கடந்த இரு நாட்களில் 3 பச்சிளம் குழந்தைகள் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளனர். மேலும், அங்கு பணியில் உள்ள டாக்டர்கள், நர்சுகள் ஆகியோரின் கவனக்குறைவு காரணமாகவும் குழந்தைகள் இறப்பது தொடர்வதாக குற்றச்சாட்டுகள் ஏற்பட்டுள்ளன.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ