தியனமும், சூரிய நமஸ்காரமும்.. அரிச்சல்முனையில் பிரதமர் மோடி : கோதண்டராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 January 2024, 11:49 am

தியனமும், சூரிய நமஸ்காரமும்.. அரிச்சல்முனையில் பிரதமர் மோடி : கோதண்டராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு!!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி பிரதமர் மோடி கோவில்களுக்கு சென்று வருகிறார். அதன்படி,நேற்று திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்த மோடி இன்று தனுஷ்கோடி ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்கிறார்.

முதல் நாளான நேற்று முன் தினம் சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடி, நேரு விளையாட்டு அரங்கத்துக்கு வந்த மோடி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இரண்டாம் நாளான நேற்று ராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பிரதமர் வருகை தந்தார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் தெற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்து அனைத்து சன்னதிகளிலும் அவர் சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து நேற்றிரவு ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்துக்கு சென்ற பிரதமர், அங்கு தங்கி ஓய்வு எடுத்துக்கொண்டு இன்று தனுஷ்கோடி ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவிலில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்கிறார்.

இந்நிலையில், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று பகல் 12 மணி முதல் இன்று பகல் 12 மணி வரை பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்ட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல், காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொது போக்குவரத்திற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

தற்போது, ராமேஸ்வரம் வழியாக தனது கார் மூலம் சாலை மார்க்கமாக அரிச்சல் முனைக்கு வந்தடைந்தார். பின்னர், அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் மலர்களை தூவி பிரதமர் மோடி வழிபாடு செய்தார். ராமர் பாலம் கட்டப்பட்டதாக நம்பப்படும் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் மலர்கள், துளசி ஆகியவற்றை தூவி பிரதமர் வழிபாடு செய்ததோடு, சிறிது நேரம் தியானம், சூரிய வழிபாடு செய்தார்.

  • Vimal shares Kalavani movie experienceநடிகர் விமல் ஓவியாக்கு அண்ணனா…என்னங்க சொல்றீங்க ..பலருக்கு தெரியாத உண்மை தகவல்..!
  • Views: - 335

    0

    0