மேகதாது அணை கட்டுவது உறுதி.. கர்நாடகா பட்ஜெட் உரையில் முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு.. தமிழக அரசுக்கு நெருக்கடி..!!

Author: Babu Lakshmanan
7 July 2023, 2:26 pm

மேகதாது அணை கட்டுவதற்கான ஒப்புதலை விரைந்து பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் அண்டையில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பல்வேறு உள்கட்சி போட்டிகளுக்கு பிறகு, சித்தராமையா முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் கர்நாடக மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை முதலமைச்சரும், நிதியமைச்சருமான சித்தராமையா தாக்கல் செய்தார்.

அப்போது, அவர் கூறியதாவது:- விரைவில் மேகதாது அணை கட்ட மத்திய அரசின் அனுமதியை பெற நடவடிக்கை எடுக்கப்படும். மேகதாது அணை திட்டம் தொடர்பாக அனுமதி கோரி மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. அணை கட்ட தேவையான நிலங்களை அரசு கையகப்படுத்த நடவடிக்கையை முதன்மையாக செயல்படுத்தப்படும். மேகதாது அணைக்கான சுற்றுசூழல் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும், என தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை கட்டும் கர்நாடகா அரசின் முடிவை தமிழக அரசு எதிர்த்து வரும் நிலையில், கர்நாடக சட்டமன்றத்தில் முதல் பட்ஜெட்டிலேயே மேகதாது அணை குறித்து முதலமைச்சர் சித்தராமையா பேசியிருப்பது பெரும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.

  • Ajith wishes on Phone to Vijay விஜய்க்கு வாழ்த்து கூறிய அஜித்? என்ன வார்த்தை சொல்லிருக்காருனு பாருங்க..!!