நாடாளுமன்றத்தில் கார்கே பேசும் போது மைக் ஆஃப் : யாரை கேட்டு அணைத்தீர்கள்… திருச்சி சிவா ஆவேசம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 July 2023, 1:25 pm

இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை அளித்தனர். மறுபக்கம் மாநிலங்களவையில் நாள் முழுவதும் மணிப்பூர் விவகாரம் குறித்து பேச வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.

சிறிது நேர விவாதத்திற்கு அனுமதி வழங்குவதாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்ததை அவர்கள் ஏற்கவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மாநிலங்களவையில் பேசியபோது அவரது மைக் அணைக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். மைக்கை அணைத்து தன்னை அவமானபடுத்திவிட்டதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த திமுக எம்பி திருச்சி சிவா, “ கார்கே பேசும்போது ஏன் மைக் அணைக்கப்பட்டது. யார் உத்தரவிட்டு மைக் அணைக்கப்பட்டது. மைக் அணைப்பது போன்ற நடவடிக்கை எப்போதும் நடந்ததில்லை.” என்றார்.

இதை தொடர்ந்து கார்கே பேசும்போது மைக் அணைக்கப்படவில்லை என்று மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர் விளக்கம் அளித்தார். ஜெகதீப் தங்கர் விளக்கத்தை ஏற்க மறுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் மக்களவை மதியம் 12 மணிவரை முடங்கியது.

  • producer lose his money because of suriya film எல்லாமே போச்சு- சூர்யா வைத்து படம் எடுத்ததால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்?