மலைப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து : தீ பிடித்து விழுந்து நொறுங்கிய அதிர்ச்சி காட்சி.. விழுந்தவர்கள் நிலை என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
21 October 2022, 2:44 pm

அருணாச்சலபிரதேச மாநிலம், மேற்கு சியங் மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளான நிலையில், அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அருணாச்சலபிரதேச மாநிலம், மேற்கு சியங் மாவட்டத்தில் உள்ள டியூட்டன் என்ற பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டரில் பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

சரியாக காலை 10.45 மணியளவில் இந்த ரோந்து பணியானது நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், அதில் பயணித்த வீரர்களின் கதி என்ன ஆனது என்பது குறித்து தெரியவில்லை.
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

விபத்து நடந்த மலைப்பகுதியில் சாலை வசதி கிடையாது என்பதால், ஹெலிகாப்டர் மூலமும், வனப்பகுதி வழியாகவும் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் எத்தனை வீரர்கள் பயணித்தார்கள் அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்