திடீரென ஆற்றில் கவிழ்ந்த படகு… நூலிழையில் உயிர்தப்பிய அமைச்சர் ; வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

Author: Babu Lakshmanan
9 June 2023, 2:33 pm

தெலங்கானாவில் ஆற்றில் திடீரென படகு கவிழ்ந்த விபத்தில் அமைச்சர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

தெலங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் ஆவதையொட்டி கரீம் நகரில் உள்ள ஆசிஃப் நகருக்கு பிற்படுத்தோர் நலத்துறை மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காங்குலா கமலாகர் படகில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், நிலைதடுமாறிய அமைச்சர் தண்ணீரில் விழுந்தார். அப்போது, அருகில் இருந்த அதிகாரிகள், காவலர்கள் மற்றும் நிர்வாகிகள் அமைச்சரை லாவகமாக காப்பாற்றினர்.

படகு கவிழ்ந்த விபத்தில் அமைச்சர் தண்ணீரில் நிலை தடுமாறி நூலிலையில் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 492

    0

    0