‘நீங்க கை தட்டுனா ஆட்டோ வரும் சொல்றேங்க’… ஆட்டோ டிரைவர் அவதாரம் எடுத்த அமைச்சர் ரோஜா… வைரலாகும் வீடியோ…!!

Author: Babu Lakshmanan
30 September 2023, 8:54 am

அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் ரோஜா ஆட்டோ ஓட்டுநர்களின் சீருடை அணிந்து, ஆட்டோ ஓட்டிய சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.

ஆந்திராவில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் ஆகியோருக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு உதவி தொகையாக தலா பத்தாயிரம் ரூபாயை வழங்கி வருகிறது.

ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா என்ற பெயரிலான இந்த திட்டத்தின் கீழ் ஐந்தாவது முறையாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, பயனாளிகளின் வங்கி கணக்கில் தலா பத்தாயிரம் ரூபாய் சேரும் வகையில், பொத்தானை அழுத்தி 11 கோடியை 86 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை விடுவித்தார்.

இந்த நிலையில், திருப்பதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா திட்டத்தில் கலந்து கொண்ட ரோஜா, ஆட்டோ ஓட்டும் பெண்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார். பின்னர், ஆட்டோ டிரைவர் போல் சீருடை அணிந்து ஒரு ஆட்டோவை ஓட்டி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

https://player.vimeo.com/video/869760349?badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?