‘மோடி ஜி ப்ளீஸ் ஒரு செல்ஃபி’ : அரசு நிகழ்ச்சியில் பிரதமரிடம் போட்டோ எடுத்துக்கொண்ட அமைச்சர் ரோஜா!!
Author: Udayachandran RadhaKrishnan4 ஜூலை 2022, 10:01 மணி
ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி
நடக்கிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் அல்லுாரி சீதாராம ராஜுவின், 125வது பிறந்தநாளையொட்டி, பெத்தாமிராமில், 30 அடி உயர வெண்கலச் சிலையை, பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, நம் நாட்டின் சுதந்திர போராட்ட வரலாறு என்பது, குறிப்பிட்ட சில ஆண்டுகள் அல்லது குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சொந்தமானதல்ல.நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கும் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இடம் உள்ளது.
காடுகளின் தலைவர் என்றழைக்கப்படும் அல்லுாரி சீதாராம ராஜு, ஆதிவாசி மக்களின் நலனுக்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும் போராடியவர்.அவரும், அவருடைய ஆதரவாளர்களும் ஆங்கிலேய அரசுக்குஎதிராக மிகவும் தீரத்துடன் போரிட்டனர்.
இவரைப் போன்ற லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்டத் தியாகிகள், இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று கனவு கண்டனர். ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என, அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பது அவர்களுடைய கனவாகும்.
அவர்கள் விரும்பிய, கனவு கண்ட நவீன இந்தியாவை உருவாக்குவதற்கு அனைவரும் இணைந்து செயல்படுவோம். நம் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் கனவுகளை நிறைவேற்றும் வகையிலேயே, கடந்த எட்டு ஆண்டாக மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது என பேசினார்.
விழா மேடையில் இருந்த பிரதமர் மோடியிடம் செல்பி எடுக்க அனுமதி கேட்ட அமைச்சர் ரோஜா பின்ன தனது செல்போனில் செல்பி எடுத்துக்கொண்டார்.
0
0