பூங்கொத்தை தாமதமாக எடுத்து வந்த பாதுகாவலருக்கு பளார் விட்ட அமைச்சர் : வைரலாகும் சர்ச்சை வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
6 October 2023, 9:18 pm

பூங்கொத்தை தாமதமாக எடுத்து வந்த பாதுகாவலருக்கு பளார் விட்ட அமைச்சர் : வைரலாகும் சர்ச்சை வீடியோ!

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருப்பவர் மஹமூத் அலி. தனது சக
அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவின் பிறந்த நாள் நிகழ்ச்சியில்
பங்கேற்றார்.

ஸ்ரீனிவாசை கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்த மஹமூத் அலி, அவருக்கு வழங்கப்பட இருந்த பூங்கொத்து எங்கே என அருகில் இருந்த பாதுகாவலரை கேட்டார். அதற்கு பதில் சொல்லும் முன், பாதுகாவலருக்கு திடீரென ‘பளார்’விட்ட அமைச்சர் , பூங்கொத்தை வேகமாக எடுத்து வருமாறு கட்டளையிட்டார்.

https://vimeo.com/871884501?share=copy

பின்னர் எடுத்து வரப்பட்ட பூங்கொத்தை, ஸ்ரீனிவாசிடம் அவர் வழங்கினார். தன் பாதுகாவலரை மஹமூத் அலி கன்னத்தில் அறைந்த ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி