ஓடும் காரில் 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் : மதுவை குடிக்க வைத்து நண்பர்களே செய்த காரியம்… 3 பேர் கைது!!
Author: Babu Lakshmanan15 July 2022, 9:26 pm
ஓடும் காரில் 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் 10ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை, அவரது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, காரில் சுற்றிப் பார்க்கலாம் என்று வசந்த் விஹாரிலிருந்து அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள காஜியாபாத் வரை சுமார் 44 கிலோமீட்டர் தூரம் அழைத்து சென்று உள்ளனர்.
செல்லும் வழியில் அவரது நண்பர்கள் இருவர் மற்றும் முகம் தெரியாத நபர் ஒருவர் என 3 பேர் மாணவியை காரிலேயே பலாத்காரம் செய்துள்ளனர். மதுபோதையில் இந்த வேலையை செய்த அந்த நண்பர்கள், சிறுமிக்கும் மதுவை கொடுத்து, பலாத்காரம் செய்து வீடியோவாகவும் எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.