4 வயது சிறுமியை அறைக்கு தூக்கிச் சென்ற சப்-இன்ஸ்பெக்டர்… கதற கதற பலாத்காரம் ; சுற்றி வளைத்து தர்மஅடி கொடுத்த மக்கள்..!!
Author: Babu Lakshmanan11 November 2023, 1:08 pm
4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டரை கடுமையாக தாக்கி போலீஸில் ஒப்படைத்த சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.
தவுசா மாவட்டம் ராகுவாஸ் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பூபேந்திரசிங். அம்மாநிலத்தில் வரும் 25ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இவர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், 4 வயது சிறுமியை கடத்திச் சென்று தனது அறையில் வைத்து சப் இன்ஸ்பெக்டர் பூபேந்திரசிங் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மற்றும் சிறுமியின் குடும்பத்தினர், சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திரசிங்கை கடுமையாக தாக்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர், காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திரசிங்கை கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.