பேய் பிடித்ததாக ஆசிரமத்தில் விடப்பட்ட சிறுமி… எரியும் கொள்ளி கட்டையை வாயில் திணித்து சித்ரவதை… ஆசிரம நிர்வாகி உள்பட 3 பேர் கைது!!

Author: Babu Lakshmanan
4 March 2023, 11:12 am

பேய் பிடித்ததாகக் கூறி ஆசிரமத்தில் விடப்பட்ட சிறுமியின் வாயில் எரியும் கட்டையை திணித்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் மகாசாமுண்ட் மாவட்டத்தில் உள்ள பதேராபலி எனும் கிராமத்தில் ஜெய் குருதேவ் மனஸ் என்ற பெயரில் ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ராய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பேய் பிடித்ததாகவும், அதனை ஓட்ட வேண்டும் எனக் கூறி கடந்த சில நாட்களுக்கு முன் ஆசிரமத்திற்கு அவரது குடும்பத்தினர் அழைத்து வந்து உள்ளனர்.

அங்கு அந்த சிறுமி தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாயாசத்தில் விஷத்தை கலந்து விட்டதாகக் கூறி, ஆசிரம நிர்வாகியான குரு மற்றும் அவரது சீடர்கள் 2 பேர் என மொத்தம் 3 பேர் சேர்ந்து சிறுமியை கடுமையாக அடித்து, தாக்கியுள்ளனர். அதோடு, எரியும் மர கட்டையை அந்த சிறுமியின் வாயின் உள்ளே திணித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாக சிறுமியின் சகோதரர் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில், ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  • sundar c openly talks about nayanthara in mookuthi amman sets நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!