இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை வழிமறித்து சில்மிஷம் : மன்னிப்பு கேட்கும் வரை வாலிபரை நையப்புடைத்த பெண்..குவியும் பாராட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 April 2022, 11:39 am

ஆந்திரா : இருசக்கர வாகனத்தை வழிமறித்து பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை சரமாரியாக தாக்கிய இளம்பெண். வைரலான வீடியோவை பார்த்த மகளிர் ஆணையத் தலைவி இளம்பெண்ணுக்கு பாராட்டு தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் விஜயவாடா கண்ணவரம் விமான நிலையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் பணி முடிந்து இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது பெண் ஊழியரின் இருசக்கர வாகனத்தை மறித்த நபரொருவர் அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் கீழே கிடந்த கம்பை எடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரிடம் – உங்களைப் போன்றவர்கள் உள்ள காரணத்தினால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகிறது என்றும் எதற்காக என்னை வழிமறித்து சில்மிஷம் செய்தாய் என்றும் கேட்டவாறு சராமாரியாக அடித்து தாக்கத் துவங்கியுள்ளார்.

இதனால் வலி தங்காமல் அந்த நபர் பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறார். இதை அங்கிருந்தவர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில் வீடியோ காட்சிகளை ஆந்திர மாநில மகளிர் ஆணையத் தலைவி வாசிரெட்டி பத்மா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பெண் ஊழியரின் தைரியத்தை பாராட்டியுள்ளார்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!