கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த எம்எல்ஏ : கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய போது சோகம்!
Author: Udayachandran RadhaKrishnan23 February 2024, 8:59 am
கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த எம்எல்ஏ : கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய போது சோகம்!
இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள படன்சேரு அருகே உள்ள ORR பகுதியில் எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியது. இதில், லாஸ்யா நந்திதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தில் கார் ஓட்டுநர் பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எம்எல்ஏ லாஸ்யா நந்திதாவின் மரணம் பிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் மற்றும் பிஆர்எஸ் கட்சி தலைவர்களுக்கு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சில நாட்களுக்கு பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சார்பில் சந்திரசேகர ராவ் பங்கேற்ற பொதுக்கூட்டம் நல்கொண்டாவில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது செர்லபள்ளி என்ற இடத்தில் நந்திதாவின் கார் மீது ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பின்னர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார்.
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் செகந்திராபாத் கண்டோன்மென்ட் தொகுதியில் இருந்து லாஸ்யா நந்திதா எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தந்தை எம்எல்ஏ சாயன்னா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காலமானார். இதைத்தொடர்ந்து அவரது மகள் லாஸ்யா நந்திதாவிற்கு பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி சீட் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.