கிரிக்கெட் விளையாடும் போது தவறி விழுந்த எம்எல்ஏ.. மருத்துவமனையில் அனுமதி : வைரலாகும் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
26 December 2023, 9:48 pm

கிரிக்கெட் விளையாடும் போது தவறி விழுந்த எம்எல்ஏ.. மருத்துவமனையில் அனுமதி : வைரலாகும் வீடியோ!

ஒடிசா மாநிலம் கலாஹண்டி மாவட்டத்தில் உள்ள நர்லா தொகுதியில் உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெற்ற போது சிறப்பு விருந்தினராக வந்த அந்த தொகுதியின் எம்.எல்.ஏ பூபேந்தர் சிங் கிரிக்கெட் தொடரை தொடங்கி வைத்தார்.

பின்னர் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவில் பேட்டிங் செய்து தொடங்கி வைக்கலாம் என எம்எல்ஏ பேட்டிங் செய்தார். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக கிரிக்கெட் மைதானத்தில் தவறி விழுந்தார்.

கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக கூறபடுகிறது. உடனடியாக நர்லா தொகுதி பிஜு ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ. பூபேந்தர் சிங்கை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!