பாலியல் குற்றவாளிக்காக ஓட்டு கேட்ட MODI, AMIT SHAH.. பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் வலியுறுத்தல்!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2024, 5:00 pm

பாலியல் குற்றவாளிக்காக ஓட்டு கேட்ட MODI, AMIT SHAH.. பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் வலியுறுத்தல்!

இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ஜெர்மனி தப்பிச் சென்ற அவர் நாடு திரும்பியதும் கைது செய்ய போலீஸ் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “ரேவண்ணா பல்லாயிரக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

கர்நாடகாவில் இந்த பலாத்கார குற்றவாளியை மேடையில் வைத்து கொண்டு அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு கேட்டார். இந்த பாவத்திற்காக நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் பாஜகவின் ஒவ்வொரு தலைவரும் நாட்டின் ஒவ்வொரு பெண்ணிடமும் கைகூப்பி தலைகுனிந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.

மேலும் படிக்க: பாஜக வைத்த 400 இலக்கு.. GOOD JOKE : அப்போ 300? காங்கிரஸ் எம்பி சசி தரூர் ஆரூடம்!

மிக மோசமான பாலியல் குற்றவாளிகள் இந்தியாவில் இருந்து தப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் – இதுதான் மோடியின் உத்தரவாதம்!” என்று தெரிவித்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி
  • Close menu