மோடியும் சிவனும் ஒண்ணு.. நாட்டுக்காக, மக்களுக்காக விஷம் குடிக்கும் நீலகண்டர் : முதலமைச்சர் பரபரப்பு பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 April 2023, 2:25 pm

கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு கலபுரகியில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சமீபத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூட்டத்தில் பேசும்போது, பிரதமர் மோடி ஒரு விஷ பாம்பு போன்றவர். அது நஞ்சா? அல்லது இல்லையா? என நீங்களே யோசித்து பார்க்கலாம்.
நீங்கள் அதனை நக்கினால், மரணம் அடைந்து விடுவீர்கள் என்று பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதற்கு பா.ஜ.க. தரப்பில் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறும்போது, ஒரு வளம் நிறைந்த மற்றும் வலிமையான இந்தியாவை பிரதமர் மோடி கட்டமைத்து வருகிறார்.

காங்கிரஸ் கட்சியானது விஷ கும்பல் ஆகி வருகிறது. அவர்கள் பிரதமர் மோடியை பற்றி நஞ்சை பரப்பி வருகின்றனர். பிரதமர் மோடி நீலகண்டர். அவர் நாட்டுக்காகவும், பொதுமக்களுக்காகவும் விஷம் குடித்து கொண்டிருக்கிறார் என சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், நாட்டின் முன்னேற்றத்திற்கு இந்த எஸ்.எம்.எஸ். (சித்தராமையா, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சிவகுமார்) ஆபத்து நிறைந்தவர்கள். இந்த எஸ்.எம்.எஸ்.சால் கர்நாடகாவின் வருங்காலம் அழிந்து விடும். கர்நாடகாவை இரட்டை இயந்திர அரசே பாதுகாக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!