கடந்த 10 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் இந்தியாவை ஆண்டு வந்த பா.ஜ.க.வுக்கு இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை(272 இடங்கள்) கிடைக்கவில்லை.
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 240 இடங்களை மட்டுமே பா.ஜ.க. கைப்பற்றியது. அதே சமயம் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. இதனையடுத்து 3-வது முறை இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார்.
அவரது பதவியேற்பு விழா டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆதரவு இல்லாமல் மோடி 3-வது முறையாக பிரதமராகி இருக்க முடியாது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
240 தொகுதிகளை வைத்துக்கொண்டு மோடி பிரதமராகிறார். ஜவகர்லால் நேரு தொடர்ந்து 3 முறை தனிப்பெரும்பான்மையுடன் பிரதமர் ஆனார்.
இருப்பினும் அவர் ஜனநாயகவாதியாகவே இருந்தார். ஆனால் பிரதமர் மோடியால் தனிப்பெரும்பான்மையுடன் பிரதமராக முடியவில்லை. மோடியின் நயவஞ்சகத்திற்கு அளவே கிடையாது. அரசியலமைப்பை சீர்குலைக்கும் வகையில் அவரது ஆட்சி இருந்தது.
மோடி அரசு முறைகேடான அரசாக இருந்தது. பணம், அதிகாரம், ஊடகம், மிரட்டல் மற்றும் அச்சுறுத்தலை பயன்படுத்தி ஆட்சி செய்தார்கள்.
இந்த புதிய அரசாங்கத்தை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமாக நான் பார்க்கவில்லை, ஏனெனில் மக்களின் தீர்மானம் மோடிக்கு எதிராகவே உள்ளது. என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து.ள்ளார்.
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.