இந்தியா-மத்திய ஆசியா இடையிலான முதலாவது உச்சி மாநாடு: காணொலி காட்சியில் பிரதமர் பங்கேற்கிறார்..!!

Author: Rajesh
27 January 2022, 8:47 am

புதுடெல்லி: இந்தியா-மத்திய ஆசியா இடையிலான முதலாவது உச்சி மாநாடு காணொலி காட்சி மூலம் இன்று நடைபெறுகிறது.

இந்தியா-மத்திய ஆசியா இடையிலான முதலாவது உச்சி மாநாடு காணொலி காட்சி மூலம் இன்று நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்கள் இதில் பங்கேற்கிறார்கள். மாநாட்டில் பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் கருத்து பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள்.

இந்தியா-மத்திய ஆசிய நாடுகள் இடையிலான உறவை புதிய உச்சிக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கின்றனர். கடந்த 2015ம் ஆண்டு மேற்கண்ட நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் செய்தார். அதன்பிறகு அந்நாடுகளுடன் இந்தியா பல்வேறு மட்டங்களில் தொடர்பு கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Anirudh marriage news அனிருத்துக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகல..கண் கலங்கிய அம்மா..மனம் திறந்து பேட்டி.!
  • Close menu