மோடிக்கு இணையான முகம்… 5வது முறையாக அரியணை ஏறும் பாஜக : மத்திய பிரதேசத்தில் சவுகான் வெற்றிக்கு காரணம் இதுதான்!!
Author: Udayachandran RadhaKrishnan3 December 2023, 11:00 am
மோடிக்கு இணையான முகம்… 5வது முறையாக அரியணை ஏறும் பாஜக : மத்திய பிரதேசத்தில் சவுகான் வெற்றிக்கு காரணம் இதுதான்!!
மத்திய பிரதேசத்தில் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கே பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்களில் வெல்ல வேண்டும். கடந்த 4 முறையாக அங்கே பாஜகதான் ஆட்சி செய்து வருகிறது. 3 முறையாக வரிசையாக அங்கே 2005ல் இருந்து 2013 வரை அங்கே பாஜக ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்து மீண்டும் இடைத்தேர்தல் மூலம் ஆட்சிக்கு பாஜக வந்தது.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் 114, பாஜக 109 இடங்களில் வென்றது. அதன்பின் 1 வருடத்தில் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிந்தியா தலைமையில் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தனர். தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் பாஜக 19 இடங்களில் வென்றது. இதன் மூலம் 128 இடங்கள் என்று மெஜாரிட்டி பெற்று பாஜக ஆட்சிக்கு வந்தது.
இப்போது 5வது முறையாக பாஜக வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அங்கே 230 இடங்களில் பாஜக 144 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 82 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மெஜாரிட்டி பெற 116 இடங்கள் போதும்.
வரிசையாக 5 தேர்தல்களில் பாஜக ஆதிக்கம் செலுத்த காரணம்;
பாஜகவிற்கு என்று அங்கே வலுவான வாக்கு வங்கி உள்ளது. பிராமணர்கள் வாக்கு, இடைநிலை ஆதிக்க சாதி வாக்கு வங்கி வலிமையாக உள்ளது.
தலித் வாக்குகளும் அங்கே கணிசமாக இருந்தாலும், திவாரி, சவுகான், ராஜ்புட் பட்டைப்பெயர்கள் கொண்ட ஜாதிகள் அதிகம் உள்ளன. இந்த ஜாதிகள் பெரும்பாலும் பாஜக சப்போர்ட்தான்.
உலகக் கோப்பையை வெல்ல நல்ல டீம் இருந்தாலும்.. தோனி போல கேப்டன் வேண்டும். அப்படித்தான் காங்கிரஸ் அங்கே வலுவாக இருந்தாலும் நல்ல தலைவர் இல்லை.காங்கிரசில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறியது கமல் நாத்திற்கு பெரிய சிக்கல் ஆனது. அங்கே சிந்தியா போன்ற போன்ற தலைவர்கள் இல்லாமல் போனது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பின்னடைவை கொடுத்தது. அரசியல் ரீதியாக கமல்நாத் பெரிய தலைவர்தான். ஆனால் அவரிடம் ஒரு வசீகரம் இல்லை. மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு என்று வலுவான மாநில முகம் கிடையாது. அங்கே மாநில ரீதியாக வலுவாக காங்கிரசை தூக்கி நிறுத்தும் முகம் கிடையாது.அங்கே பாஜகவின் மிகப்பெரிய முகம் சிவராஜ் சிங் சவுகான் . அவருக்கு இருக்கும் மக்கள் ஆதரவு குஜராத்தில் மோடிக்கு இருக்கும் ஆதரவிற்கு இணையானது.
தமிழ்நாட்டில் கருணாநிதி, ஜெயலலிதா போல ஸ்டேட்ஸ்மேன் இமேஜ் கொண்ட தலைவர்தான் சவுகான். அவரை எதிர்க்க கமல்நாத்களால் முடியாது. டிகே சிவக்குமார், சித்தராமையா போன்ற தலைவர்கள் காங்கிரசுக்கு தேவை. அப்படி யாரும் காங்கிரசுக்கு அங்கே இல்லை என்பதே சோகம்.