கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை : ஐக்கிய அரபு அமீரக்கத்தில் இருந்து வந்தவருக்கு தொற்று.. விரைகிறது மத்திய குழு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 July 2022, 9:47 pm

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நபரின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் அவருடன் தொடர்புடைய 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

குரங்கு அம்மை பாதித்த நபர் கடந்த 12 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்திருந்தார். கேரள மாநிலத்தில் குரங்கு அம்மை நோய் உறுதியாகி உள்ள நிலையில் அம்மாநில சுகாதாரத்துறைக்கு உதவும் வகையில் மத்திய சுகாதாரத்துறை குழு ஒன்றை அனுப்பி வைக்க உள்ளது.

இதனிடையே மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை தொடர்பான வழிகாட்டுதலை வழங்கும் என தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் குரங்கு அம்மை நோய் உறுதியாகி உள்ள நிலையில் அம்மாநில சுகாதாரத்துறைக்கு உதவும் வகையில் மத்திய சுகாதாரத்துறை குழு ஒன்றை அனுப்பி வைக்க உள்ளது.

இதனிடையே மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை தொடர்பான வழிகாட்டுதலை வழங்கும் என தெரிவித்துள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 799

    0

    0