6 வயது சிறுமியை பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்ற காமுகன்.. கடவுள் போல வந்த குரங்குகள்..!!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2024, 2:13 pm

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில் உள்ள தௌலா கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், வீட்டிற்கு வெளியே விளையாடிக்கு கொண்டிருந்த 6 வயது சிறுமியை, அவ்வழியே சென்ற வேறு கிராமத்த சேர்ந்த நபர் அழைத்துள்ளார்.

சிறுமியை வற்புறுதுத்தி அங்கிருந்த பாழடைந்த கட்டிடத்ற்கு அழைத்து சென்று பாலியல் வன்முறை செய்ய முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த குரங்குகள் கூட்டம், அந்த நபரை கடித்து குதறியது.

குரங்கின் தாக்குதலுக்கு பயந்து அவர் சிறுமியை விட்டுவிட்டு ஓடியுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Monkey Save a girl from rape

மேலும் படிக்க: எம்ஜிஆர் மட்டும் கூடுதலாக 2 வருஷம் உயிரோட இருந்திருந்தால் அது நடந்திருக்கும் : எஸ்பி வேலுமணி பேச்சு!

குரங்குகளின் தாக்குதலுக்கு பயந்து அந்த நபர் சிறுமியை விட்டுவிட்டு ஓடி உள்ளார். இதையடுத்து சிறுமி தனது வீட்டிற்கு ஓடிச்சென்று பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி உள்ளார்.

இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, எதிர்ப்பு தெரிவித்தால் சிறுமியின் குடும்பத்தினரை கொன்று விடுவதாக அந்த நபர் மிரட்டியதாகவும் சிறுமியின் பெற்றோர் கூறி உள்ளனர்.

இதையடுத்து கிராமத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் குற்றவாளி, சிறுமியை தன்னுடன் அழைத்துச் செல்வது பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை வைத்து குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!