காலையில் அறுவை சிகிச்சை : மாலையில் மரணம்… வீட்டுக்கு தெரியாமல் சிகிச்சை மேற்கொண்ட பிரபல நடிகை பரிதாப பலி!!
Author: Udayachandran RadhaKrishnan17 May 2022, 6:00 pm
கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிரபல கன்னட நடிகை சேதனா ராஜ் மரணமடைந்துள்ளார்.
சேதனா ராஜ் பிரபல கன்னட சின்னத்திரை நடிகை ஆவார். இவருக்கு வயது 21. இவர் சில கன்னட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் பெங்களூரில் கொழுப்பு நீக்கும் அறுவை சிகிச்சை செய்தபோது மரணமடைந்துள்ளார்.
இது குறித்து அவரது பெற்றோர் கூறுகையில் பெற்றோர்கள் சம்மதமில்லாமல் அறுவை சிகிச்சை செய்துள்ளார். தகுந்த உபகரணம் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தனது மகள் மருத்துவமனையில் அஜாக்கிரதையால் தான் உயிரிழந்துள்ளதாக அவரது தந்தை கோவிந்தராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அவரது தாயார் மகளின் இறப்பு குறித்து கூறுகையில், எனது மகள் ஆரோக்கியமானவர் எந்த நோயும் இல்லாதவர். அவளுக்கு மார்பில் அதிகமான கொழுப்பு இருப்பதாக யாரோ கூறியதை கேட்டு தனது தோழிகளுடன் இணைந்து அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
எங்களது அனுமதியின்றி தான் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். மேலும் மருத்துவமனையின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.