ஒடிசா – கியாஜ்ஹர் மாவட்டம் சரசபசி கிராமத்தை சேர்ந்த சாரதா (70) என்பவர் கணவரை இழந்த நிலையில், தனது 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இருவருக்கும் திருமணமாகி அதே கிராமத்திலேயே வசித்து வந்த நிலையில், சாரதா தனது மூத்த மகன் கருணாவின் வீட்டில் வசித்து வந்தார். நோய் காரணமாக மூத்த மகன் கருணா அண்மையில் உயிரிழந்த நிலையில், இளைய மகன் சஸ்துருகன் தனது மனைவியுடன் அதேகிராமத்தில் தனியே வசித்து வந்தார்.
சஸ்துருகனுக்கு சொந்தமான தோட்டத்தில் காலிபிளவர் பயிரிட்டுள்ளார். சாரதா நேற்று தனது இளைய மகனின் தோட்டத்தில் இருந்து சமைக்க காலிபிளவர் பறித்துள்ளார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த சஸ்துருகன் தனது தாயார் சாரதாவை கடுமையாக தாக்கியதுடன், தனது தாயார் என்று கூட பார்க்காமல் சாரதாவை வீட்டிற்கு அருகே இருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளார்.
மேலும், மாமியாரை காப்பாற்ற சென்ற மனைவியையும் அவர் தாக்கினார். இறுதியில் மகனிடம் இருந்து அவரது தாயார் மற்றும் மனைவியை ஊர் மக்கள் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகை சுகன்யா புது நெல்லு புது நாத்து படம் மூலம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்த…
விஜய்யின் கடைசி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது…
எம்ஜிஆர்-நம்பியார் நட்பு திரைப்படங்களில் எம்ஜிஆர்க்கு நம்பியார் எப்போதும் வில்லன்தான். அதுவும் இந்த ஹீரோ வில்லன் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த படம்…
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் முரளிதரன் என்பவர்…
கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. சமையல் வேலை செய்யும் இவர், இந்து முன்னணியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.…
கோவிலுக்கு சென்ற இளம்பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை…
This website uses cookies.