சாலையில் இறந்து கிடந்த மகன்… தள்ளுவண்டியில் உடலை எடுத்துச் சென்ற தாய் ; நெஞ்சை உலுக்கிய சம்பவம்!!

Author: Babu Lakshmanan
7 September 2023, 11:01 am

உத்தரபிரதேசத்தில் சாலையில் இறந்து கிடந்த மகனின் உடலை தள்ளுவண்டியில் வைத்து தாய் தள்ளிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீரட் பகுதியைச் சேர்ந்த ராஜு என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு மதுக்கடை அருகே உயிரிழந்து கிடந்தார். பல மணிநேரமாக உடல் அங்கேயே கிடந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்து வந்த தாயும், தம்பியும் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பார்த்து கதறி அழுதனர்.

பின்னர், இறுதிச் சடங்கு செய்வதற்காக உடலை எடுத்துச் செல்ல வாகன உதவியை நாடினார். ஆனால், எதுவும் கிடைக்காத நிலையில், ராஜூ உடலை தள்ளுவண்டியில் ஏற்றி அவரது தாயும், தம்பியும் தள்ளிச் சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த நிலையில், வாகனம் கிடைக்காததால் மனமுடைந்த இருவரும் இறுதி சடங்கு செய்வதற்கும் போதிய பணம் இல்லாமல் கஷ்டப்பட்டனர். பின்னர், அங்கிருந்த காவல்நிலையத்தின் உதவியை நாடினர். அங்கு பணியில் இருந்த காவலர் உதவி செய்ததோடு,
மேலும் சிலரிடமும் நிதி திரட்டி ராஜூ உடலை இறுதி சடங்கு செய்ய உதவினார்.பின்னர் இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது.

இதற்கிடையே, ராஜுவின் உடலை தள்ளுவண்டியில் ஏற்றி சென்ற வீடியோ வைரலான நிலையில், மீரட் மருத்துவக்கல்லூரி முதல்வர் அகிலேஷ் மோகன் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!