மாமியார் அழகில் மயங்கிய மாப்பிள்ளை… பக்கத்தில் படுத்திருந்த மனைவி மாயம் : காவல்நிலையத்திற்கு ஓடிய கணவர்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 January 2023, 3:37 pm

புது மனைவியுடன் மாமியார் வீட்டுக்கு சென்ற போது காதல் வயப்பட்ட இருவரும் அடிக்கடி உல்லாசம்.

ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் உள்ளது சியாகாரா என்ற கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர்.

ரமேஷ் தன்னுடைய மூத்த மகள் கிஷ்ணாவை நாராயணன் ஜோகி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். நாராயணன் ஜோகி, தன்னுடைய புது மனைவியுடன், மாமியார் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

அப்போது மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையே திடீரென காதல் பற்றிக் கொண்டது. அந்த காதல் தகாத உறவு வரை கொண்டு போய்விட்டது.

ஒருகட்டத்தில் இருவருமே பிரிந்து வாழ முடியாத நிலைமைக்கும் ஆளாகிவிட்டனர். கடைசியில், புத்தாண்டு அன்று, புது வாழ்க்கையை தொடங்குவதற்காக, 2 பேருமே வீட்டை விட்டு ஓடிவிட்டனர்.
விடியற்காலை நேரத்தில் மாமியாரும் மருமகனும் வெளியேறியுள்ளனர். மனைவி, மருமகனை காணவில்லை என்பதை அறிந்த ரமேஷ் அதிர்ந்து போய், போலீசுக்கு ஓடினார்.

காவல்நிலையத்தில் அவர் அளித்த புகாரில், என் மகளுக்கு கல்யாணம் முடிந்த பிறகு, மகளும் மருமகனும் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.

அப்படித்தான், மருமகன் டிசம்பர் 30ம் தேதி எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது நானும் மருமகனும் அன்றைய தினம், கூடுதலாகவே தண்ணி அடித்தோம்.

போதையில் நான் விழுந்துவிட்டேன். மறுநாள் காலையில் கண்விழித்து பார்த்தபோது, பக்கத்தில் இருந்த என் மனைவியையும் மருமகனையும் காணவில்லை. என்னுடைய மனைவியை மருமகன் மயக்கிவிட்டார்.
அவர்தான் என் மனைவியை இழுத்து சென்றுள்ளார், என் மனைவியை மீட்டு தாருங்கள் என்று அந்த புகாரில் கூறி உள்ளார் . புகாரின்பேரில் போலீசார் மாமியார் மருமகனை தேடி வருகிறார்கள்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!