கட்டுனா இந்த ஊர் பொண்ணத்தான் கட்டணும் : மருமகனுக்கு 300 வகை உணவு வகைகளை சமைத்து விருந்து வைத்து அசத்திய மாமியார்!!
Author: Udayachandran RadhaKrishnan17 January 2023, 1:13 pm
சங்கராந்தியை முன்னிட்டு மருமகன்களுக்கு செய்யப்படும் வரவேற்பு உபசரிப்புகளை பார்த்து கோதாவரி மாவட்டத்தில் திருமணத்திற்கு பெண் கிடைக்காதா என மணமகன்கள் ஏங்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவின் கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி ஆகிய மாவட்டங்களில் மருமகன்களுக்கு கிடைக்கும் மரியாதை வேறு எங்கும் கிடைக்காது.
மருமகன்களை தங்கள் மகன்களை விட அதிகமாக நேசிப்பது அங்கு இருக்கும் பெரியோர்களின் வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, சங்கராந்தி ஆகிய சமயங்களில் மாமனார் வீட்டுக்கு வரும் மருமகன்களை உபசரிப்பதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள்.
நேற்று மேற்கு கோதாவரி மாவட்டம் பீமரத்தை சேர்ந்த மாமியார் லட்சுமி என்பவர் ஹைதராபாத்தை சேர்ந்த தங்கள் மருமகனுக்கு 173 வகையான உணவுகளை பரிமாறி அசத்தி இருந்தார். அதேபோன்ற மேலும் ஒரு சம்பவம் அங்கு நடந்துள்ளது.
பீமவரத்தை சேர்ந்த காசி விஸ்வநாத், லட்சுமி தம்பதிகள் வீட்டிற்கு அவர்களுடைய மருமகன் நாராயணா மனைவியுடன் ஹைதராபாத்தில் இருந்து வந்திருந்தார்.
மருமகனை அசத்த நினைத்த மாமியார் லட்சுமி, அவருக்கு 125 வகையான இனிப்புகளை தயாரித்து வெள்ளி கிண்ணங்களில் பரிமாறி அசத்தினார்.
மாமியாரின் வரவேற்பு மரியாதை, உபசரிப்பு ஆகியவற்றை பார்த்த மருமகன் நாராயணா இவ்வளவையும் நான் எப்படி சாப்பிடுவேன் என்று புலம்பினார்.
அதனை தொடர்ந்து அவருக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு வகைகள் சிலவற்றை மட்டும் சாப்பிட்ட மருமகனுக்கு மாமியார் வீட்டில் அனுமதி அளிக்கப்பட்டது.
மகளுடன் மருமகன் வீட்டிற்கு வர இருந்த நிலையில் வீட்டின் முன் முப்பது அடி உயர பிளக்ஸ் பேனரும் கட்டப்பட்டிருந்தது.
ஆந்திராவின் டெல்டா மாவட்டங்களில் சங்கராந்தி முன்னிட்டு மருமகன்களுக்கு அளிக்கப்படும் வரவேற்பு மரியாதையை பார்க்கும் ஆந்திர இளைஞர்கள் திருமணத்திற்கு டெல்டா மாவட்டங்களில் இருந்து பெண் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று புலம்பு துவங்கியுள்ளனர்.
0
0