‘நான்’ பட பாணியில் தாய் செய்த சம்பவம்.. மகன் கொடூர கொலை!

Author: Hariharasudhan
14 October 2024, 3:28 pm

புனேவில் தனது தாய் தகாத உறவில் இருந்ததைப் பார்த்த மகனை, தாயும், அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பெர்னே பாட்டா, வாக்மரே வஸ்டி பகுதியைச் சேர்ந்தவர் சுமித்ரா லால்சிங் தாகூர். 55 வயதான இவருக்கு 30 வயதில் அனில் லால்சிங் தாகூர் என்ற மகனும், 32 வயதில் சுனில் லால்சிங் என்ற மகனும் இருந்தனர். இந்த நிலையில், சும்திராக்கு 34 வயது மதிக்கத்தக்க நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து உல்லாசத்தை அனுபவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை தன்னுடைய வீட்டிலேயே தனது தாய் வேறொரு நபருடன் தகாத உறவில் இருந்ததை இளைய மகன் அனில் லால்சிங் பார்த்துள்ளார். பின்னர், இது குறித்து தனது தாயாரிடம் கேட்டுள்ளார். இதனால் மூவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும், அனில் சிங்கை பலமாக தாக்கியுள்ளனர். இறுதியாக, சுமித்ரா பெரிய கல்லைத் தூக்கி தனது மகன் என்றும் பாராமல் அவர் மீது போட்டுள்ளார்.

மேலும் படிக்க: உன் மனைவி இப்போ என் மனைவி.. உன்னால முடிஞ்சதை பாத்துக்கோ.. மிரட்டும் காவலர்… ஆட்டோ ஓட்டுநர் கண்ணீர்!

இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். பின்னர், இது குறித்து அறிந்த லோனிகண்ட் போலீசார் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். இதில், உயிரிழந்த அனில் லால்சிங் தாயாரின் தகாத உறவு விவகாரம் தெரிய வரவே, அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இறுதியாக, தானும், தனது கள்ளக்காதலரும் சேர்ந்து அனில் லால்சிங்கை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர், உயிரிழந்த அனில் சிங்கின் மூத்த மகன் சுனில் லால்சிங் அளித்த புகாரின் பேரில் சுமித்ராவை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கள்ளக்காதலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 240

    0

    0