பிஞ்சுக் குழந்தைகள் மீது தீ வைத்த தாய்… 6 வயது குழந்தை பலி : தாயை கைது செய்த போலீசார்.. விசாரணையில் பகீர் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 December 2022, 7:21 pm

குடும்பத் தகராறில் இரு மகள்கள் மீது தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் முலபாகிலு நகரில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் குடும்பத் தகராறில் தனது இரு மகள்கள் மீது தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் ராமசமுத்திரத்தில் உள்ள குருபனஹள்ளி பகுதியைச் சேர்ந்த பெண் ஜோதி. இந்த நிலையில் ஜோதி நேற்று காலை குடும்பத் தகராறில் தனது மகள்களுடன் அஞ்சனாத்ரி மலை உச்சிக்கு வந்துள்ளார். தனது மகள்கள் மீது தீ வைத்துள்ளார்.

பின்னர் தன் மீதும் தீ வைத்துக் கொள்ள முயன்றுள்ளார். இதையடுத்து உள்ளூர் மக்கள் ஜோதியை தடுத்து நிறுத்தினர். கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதில் ஒரு மகள் (6 வயது) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். பலத்த தீக்காயங்களுக்கு ஆளான மற்றொரு மகள் முலபாகிலு அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாள். தாய் ஜோதியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!