வாரிசு வேண்டும் என அடம்பிடித்த கணவர்… இரு மகள்களை பலிகடா ஆக்கிய தாய்.. இறுதியில் நடந்த சோகம்..!!
Author: Babu Lakshmanan15 July 2023, 10:51 am
கணவரின் ஆசைக்காக தாய் தனது மகள்களை பலிகடா ஆக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா – ஏலூர் மாவட்டம் வட்லூரைச் சேர்ந்த 30 வயது பெண்ணுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2007ம் ஆண்டு கணவன் உடல்நலக்குறைவால் இறந்து விட்டதால், தனது தாய்மாமன் சதீஷ்குமார் (43) என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, முதல் கணவருக்கு பிறந்த தனது இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு சதீஷ்குமாருடன் வாழ்ந்து வந்தார்.
சுமூகமாக இவர்களின் வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில், தனக்கென ஒரு வாரிசு வேண்டும் என்றும், அதனால் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என சதீஷ்குமார் கேட்டுள்ளார். ஆனால், அவரது மனைவியோ, இரு குழந்தைகள் பிறந்ததும் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டதால் குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லை என்பதை சதீஷ் குமாருக்கு தெரிவித்துள்ளார்.
இதனால், ஆவேசமான சதீஷ்குமார், உன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாவிட்டால், வேறு திருமணம் செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார். இதனால் பதறிப் போன அந்தப் பெண், முதல் கணவனை இழந்த பிறகு கிடைத்த கிடைத்த சந்தோஷ வாழ்க்கையை விட மனமில்லை. அதனால் அந்த பெண், நீ வேறு பெண்ணை எல்லாம் திருமணம் செய்ய வேண்டாம். எனது மகள் மூலம் குழந்தை பெற்றுக் கொள் என கூறினார்.
இதையடுத்து, விசாகப்பட்டினத்தில் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தனது மூத்த மகளை அழைத்து வந்து சதீஷ்குமாரின் விருப்பத்திற்கு இணங்க கட்டாயப்படுத்தியுள்ளார். பலமுறை அந்த சிறுமிமயை பலாத்காரம் செய்த நிலையில், அவர் கர்ப்பமானார். அவர் மூலம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, 2வது மகளையும் அடைய வேண்டும் என்பதற்காக, எனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என சதீஷ்குமார் அடம்பிடித்துள்ளார்.
இதனை புரிந்து கொள்ளாத அந்த பெண் இரண்டாவது மகளையும் ஒப்படைத்தார். அந்த சிறுமியையும் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை இறந்தே பிறந்தது. இதனால் குழந்தையை தூக்கி கால்வாயில் வீசினர்.
இதையடுத்து, கணவர் சதீஷ்குமாருடன் தகராறு ஏற்பட்ட நிலையில், தனது 2 மகள்களையும் சதீஷ்குமாரிடம் விட்டுவிட்டு விசாகப்பட்டினத்திற்கு சென்று அங்குள்ள போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில், மூத்த மகள் மீண்டும் 3 மாதம் கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் ஏலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சதீஷ்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.