சுயநினைவை இழந்த பாம்பு… மூச்சுக்காற்று கொடுத்து உயிர்பிழைக்க வாய்த்த காவலர் : வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
26 October 2023, 8:04 pm

சுயநினைவை இழந்த பாம்பு… மூச்சுக்காற்று கொடுத்து உயிர்பிழைக்க வாய்த்த காவலர் : வைரலாகும் வீடியோ..!!

மத்திய பிரதேசம் – நர்மதாபுரம் பகுதியில் பாம்பு ஒன்று விவசாய நிலத்தில் மயங்கி மூர்ச்சையான நிலையில் கிடந்தது. அந்த சமயம் அங்கு பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்த காவலர் ஒருவர் அதனை கண்டுள்ளார். விவசாய நிலத்தில் அடிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தினால், பாம்பு மூர்ச்சையானதை உணர்ந்த அந்த காவலர், சற்றும் யோசிக்காமல், உயிர்காக்கும் சிகிச்சையை பாம்புக்கு அளித்தார்.

பாம்பின் வாயோடு வாய் வைத்து மூச்சுக் காற்றை செலுத்தி அந்தப் பாம்புக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவலரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், இதனை அனைவரும் முயற்சிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

  • Rashmika Mandanna துரோகம் செய்தாரா ராஷ்மிகா? காங்கிரஸ் எம்எல்ஏ மிரட்டல்.. என்ன நடந்தது?