வீடியோ காலில் பெண் முன்னே நிர்வாணமாக நின்ற எம்பி : ஆபாசமான செய்கை செய்த வீடியோ வைரலானதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 August 2022, 4:31 pm

எம்.பி ஒருவர் பெண் ஒருவருக்கு வீடியோ கால் மூலம் தன்னுடைய அந்தரங்க உறுப்பை காட்டும் காணொலி சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலம் இந்துபுரம் தொகுதி ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. கோரண்ட்லா மாதவ். இவர் பெண் ஒருவருடன் வீடியோ காலில் பேசி கொண்டிருக்கும் போது அந்தப் பெண்ணுக்கு தன்னுடைய அந்தரங்க உறுப்பை காண்பிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. மாதவ் தெலுங்கு தேசம் கட்சியினர் என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மார்பிங் செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இது பற்றி நான் போலீஸ் சூப்பிரெண்டிடம் புகார் செய்திருக்கிறேன் இந்த வீடியோ தொடர்பாக எந்த விதமான விசாரணைக்கும் நான் தயார் என்று கூறினார். ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் இது போன்ற சர்ச்சையில் சிக்குவது முதல் முறையல்ல.

சில மாதங்களுக்கு முன்னர் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அவந்தி ஸ்ரீனிவாஸ், அம்பதி ராம்பாபு பெண்களுடன் ஆபாசமாக பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!