காய்கறிகள், பழங்களை வாங்கிக் கொண்டு துணை முதலமைச்சரை பார்க்க சென்ற எம்பிக்கள் : என்ன ஆச்சு தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2024, 2:21 pm

காய்கறிகள், பழங்களை வாங்கிக் கொண்டு வரச்சொன்ன துணை முதலமைச்சர்.

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை மங்களகிரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்த ஜனசேனா கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாலசவுரி, உதய ஸ்ரீனிவாஸ் ஆகியோர் காய்கறிகளை வழங்கினர்.

அப்போது பேசிய பவன் கல்யாண் இனிமேல் என்னை யாராவது சந்திக்க வந்தால் சால்வை,மலர் கொத்து ஆகியவற்றை கொண்டு வராதீர்கள் .

அதற்கு பதிலாக விரைவில் ஆந்திர முழுவதும் திறக்கப்பட இருக்கும் அண்ணா உணவகத்திற்கு தேவையான பொருட்களை என்னிடம் கொடுத்தால் அவற்றை அந்த துறைக்கு அனுப்பி வைப்பேன்.

நீங்கள் வெகுமதியாக எனக்கு ஒன்றையும் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. சால்வை, பூங்கொத்து ஆகியவை போன்ற எனக்கு தேவையில்லாத பொருட்களை கொடுக்காதீர்கள். எனக்கு பரிசாக கொடுக்கப்பட்ட சிலைகளை என்ன செய்வது என்றே தெரியவில்லை.

பிறந்தநாள், திருமணநாள் ஆகியவற்றின் போது பரிசுகளை வழங்க விரும்பும் பொதுமக்கள் ஆந்திராவில் விரைவில் திறக்கப்பட இருக்கும் அண்ணா உணவகம், ஆதரவற்றோர் இல்லம் ஆகியவற்றுக்கு நன்கொடைகள் வழங்க வேண்டும்.

இதன் மூலம் குறைந்தது ஒரு 10 பேர் வயிறு நிறைய சாப்பிடுவார்கள் என்று அப்போது கூறினார்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 259

    0

    0