திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த பின் முகேஷ் அம்பானி கொடுத்த நன்கொடை : வியந்து போன தேவஸ்தான நிர்வாகிகள்!!
Author: Udayachandran RadhaKrishnan16 September 2022, 1:12 pm
திருப்பதி : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஏழுமலையானை வழிபட்டார்.
ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி இன்று காலை அபிஷேக சேவை மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார்.
சாமி தரிசனத்திற்காக நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்த அவரை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி மற்றும் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.
இன்று அதிகாலை கோவிலுக்கு சென்ற அவர் ஏழுமலையானை வழிபட்டார்.
சாமி தரிசனத்திற்கு பின் அவருக்கு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி,நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். தொடர்ந்து தேவஸ்தானம் சார்பில் அவருக்கு வேத ஆசி வழங்கப்பட்டது.
பின்னர் கோவிலுக்கு வெளியே வந்த அவர் ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு ஆண்டு ஏற்பட்டு வரும் அபிவிருத்தி காரணமாக இந்தியர்கள் பெருமை கொள்கின்றனர். ஏழுமலையான் ஆசி வேண்டி இங்கு வந்தேன் என்று கூறினார்.
தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் நன்கொடையாக அவர் வழங்கினார்.
அதற்கு உரிய காசோலையை அவர் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியிடம் ஏழுமலையான் கோவிலில் ஒப்படைத்தார்.