விமான ஓடுபாதையில் உணவு அருந்திய பயணிகள்…. மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை

Author: Babu Lakshmanan
16 January 2024, 3:04 pm

மும்பையில் விமான ஓடுபாதையில் பயணிகள் அமர்ந்து உணவு அருந்திய விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கடந்த ஆண்டு இறுதி முதல் தற்போது வரை வட இந்தியாவில் பனிப்பொழிவு மிக கடுமையாக நிலவி வருகிறது. இதனால், தலைநகர் டெல்லியில் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது, கடந்த 14ம் தேதி கோவாவில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய விமானம், பனிப்பொழிவு காரணமாக டெல்லிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது.

கோவாவில் இருந்து புறப்படும் போதே அதிக காலதாமதம் ஏற்பட்டதால் விமானப் பயணிகள் அதிக கோபத்தில் இருந்தனர். மும்பையில் தரையிறக்கப்பட்டதும் அவர்களுக்கு தேவையான உணவுகள் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்ததால், சில பயணிகள் விமான ஓடுபாதையிலேயே அமர்ந்து உணவை உட்கொண்டனர்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், மும்பை விமான நிலையத்திற்கும், இண்டிகோ விமான அலுவலகத்திற்கும் விளக்கம் கேட்டு மத்திய விமானப் போக்குவரத்து துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதாவது, பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததான் காரணமாகவே அவர்கள் ஓடுபாதையில் அமர்ந்து உணவு உட்கொள்ளும் நிலை ஏற்பட்டதாகவும், வழக்கமாக விமானங்களுக்கு ஒதுக்கும் இடத்தை வழங்காமல், தொலைவில் புதிய இடத்தை விமான நிலையத் ஒதுக்கியதால் தான் இந்த தவறு நடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  • ajith kumar and sivakarthikeyan on csk vs srh match அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!